கொரோனா வைரஸானது கண்களைத்
தாக்குவதாகவும், முதல் அறிகுறியாக கண்கள் சிவந்து காணப்படுகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே இந்த அறிகுறியையும் கவனத்தில் கொள்ளுமாறும் எச்சரித்துள்ளனர்.
கண்கள் சிவந்தும், கண்களில் அழுக்கு வெளியேறியபடி வெண்படலம் படர்ந்த அறிகுறிகளுடன் 1 முதல் 3% மக்கள் கொரோனா தாக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாக American Academy of Ophthalmology கூறியுள்ளது.
கண்களின் மூலமும் பரவலாம் என யூகித்து எச்சரித்து வந்த நிலையில் தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதுவும் கண்ணீர் வழியாகவும், கண் இமைகள் வழியாகவும் அவை பரவுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
சிலருக்கு கண்கள் சிவத்தல் மட்டுமன்றி காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் அறிகுறிகளும் இருந்ததாகக் கூறுகின்றனர்.
எனவே கண்கள் சிவந்து அத்துடன் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அழைத்து பரிசோதனை செய்துகொள்வது அவசியம் என்கின்றனர்.
*-கொரோனாவிலிருந்து கண்களைப் பாதுகாக்கும் வழிகள் :*
கண்களைத் தொடாமல் இருங்கள். கண்களை கசக்குதல் தவறு.
கண்களைத் துடைப்பதாக இருந்தால் சுத்தமான பருத்தித் துணி கொண்டு துடையுங்கள்.
லென்ஸ் அணிவோர் அதைத் தவிர்த்துவிட்டு கண்ணாடி அணியலாம்.
மற்றவர்களின் கண்ணாடி, சன்கிளாஸுகளை அணிவதைத் தவிருங்கள்.
கண் பிரச்னை இல்லை என்றாலும் பாதுகாப்பிற்கு கண்ணாடி அணிந்துகொள்ளலாம்.
கண்களில் மேக்-அப் போடுவதைத் தவிர்த்தல் நல்லது